யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இல்லாதுபோனால் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம் என தையிட்டியை சேர்ந்த காணி உரிமையாளரான சுகுமாரி சாருஜன் கூறியுள்ளார்.
காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் வடபிராந்திய சந்திப்பு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் நடைபெற்றது.அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.