EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
முட்டை சேர்க்காமல் மினி கிறிஸ்துமஸ் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க…

முட்டை சேர்க்காமல் மினி கிறிஸ்துமஸ் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க…

மார்கழி 24, 2024
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. இந்த கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கேக் தான். அதுவும் கிறிஸ்துமஸ் என்றாலே ஃபுரூட் கேக் தான் ஸ்பெஷல். நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் கேக் செய்வீர்களானால், இந்த ஆண்டு மினி கிறிஸ்துமஸ் கேக்கை செய்யுங்கள்.

அதுவும் நீங்கள் முட்டை சேர்க்காத ஃபுரூட் கேக் செய்ய விரும்பினால், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே அதிகம் கஷ்டப்படாமல் சுலபமாக எப்படி மினி கிறிஸ்துமஸ் கேக்கை செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

* பேரிச்சம் பழம் – 8

* கருப்பு உலர் திராட்சை – சிறிது

* பச்சை உலர் திராட்சை – சிறிது

* மஞ்சள் உலர் திராட்சை – சிறிது

* மூன்று விதமான நிறங்களில் டூட்டி ஃபுரூட்டி – சிறிது

* செர்ரிப் பழம் – சிறிது (இரண்டு துண்டுகளாக நறுக்கியது)

* வால்நட்ஸ் – 1 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* மைதா – 1 கப்

* பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்

* பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்

* உப்பு – 1/4 டீஸ்பூன்

* நாட்டுச்சர்க்கரை – 3/4 கப்

* உருக்கிய வெண்ணெய் – 1/2 கப்

* காய்ச்சி ஆற வைத்த பால் – 1 கப்

* வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்

* பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்

* மினி கப் கேக் மோல்டு

செய்முறை: * முதலில் பேரிச்சம் பழத்தை எடுத்து, அதன் விதைகளை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் மூன்று விதமான உலர் திராட்சைகள், மூன்று விதமான நிறங்களில் டூட்டி ஃபுரூட்டி, நறுக்கிய செர்ரிப் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் வால்நட்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். * பின்னர் ஒரு அகலமான பௌலில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் எடுத்து வைத்துள்ள உலர் பழங்களை சேர்த்து, அத்துடன் நறுக்கி வைத்துள்ள வால்நட்ஸையும் சேர்தது நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் உருக்கிய வெண்ணெய் சேர்த்து கிளறி, பின் காய்ச்சி ஆற வைத்துள்ள பாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அதன் பின் அதில் வெண்ணிலா எசன்ஸ், பட்டைத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து ஓவனை 15 நிமிடம் 180 டிகிரி C-யில் முன்கூட்டியே சூடேற்ற வேண்டும்.

* அதற்குள் மினி கப் கேக் மோல்டை எடுத்து, அதனுள் மினி கப் மோல்டு பேப்பரை எடுத்து, அதில் சிறிது வெண்ணெய் தடவி, அவற்றில் கலந்து வைத்துள்ள கலவையை முக்கால்வாசி அளவில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த மோல்ட்டை ஒவனில் 180 டிகிரி C-யில் 40 நிமிடம் பேக் செய்து எடுத்தால், சுவையான மினி கிறிஸ்துமஸ் கேக் தயார்.

 

தொடர்புடைய செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 22, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 18, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 15, 2025
உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்
அண்மைய செய்திகள்

உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்

ஆவணி 12, 2025
தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்
அண்மைய செய்திகள்

தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்

ஆவணி 10, 2025
முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வழிகள்
ஆரோக்கியம்

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வழிகள்

ஆவணி 8, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு!

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு!

4 நாட்கள் முன்னர்
வெள்ளப்பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

வெள்ளப்பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

7 நாட்கள் முன்னர்
கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்!

கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்!

7 நாட்கள் முன்னர்
நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

7 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் அடையாளம்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் அடையாளம்

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In