EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

தை 2, 2025
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

முந்திரி பருப்பு விலை அதிகம் என்றாலும் அதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம். இதில் புரதம், நார்ச்சத்து, விற்றமின் ஈ, விற்றமின் கே மற்றும் விற்றமின் பி6 உள்ளன. துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் நிறைந்துள்ளன. முந்திரி ருசியாக இருப்பது மட்டுமின்றி உடலுக்கு பல வழிகளிலும் நன்மைகளை அளிக்கிறது.

உலர் பழங்கள் அனைத்துமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தான். வாதுமை பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவை உடலுக்குமிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று முந்திரி பருப்பும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. முந்திரிப் பருப்பு சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களில் அடங்கும். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை மூளை சிறப்பாக இயங்க உதவுவது முதல், இதய அரோக்கியம், எமும்புகள் ஆரோக்கியம் என பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.

மூளை ஆரோக்கியம்: ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள முந்திரி பருப்பும், மூளை சிறப்பாக இயங்க உதவுகிறது. மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு முந்திரி பருப்பை உட்கொள்ள வேண்டும். முந்திரியில் உள்ள விற்றமின் பி நினைவாற்றலைக் கூர்மையாக்கும்.

இதய ஆரோக்கியம்: புரதம், நார்சத்து நிறைந்த முந்திரி பருப்பில் இதயத்திற்கு ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்புகளும் உள்ளது. இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.

எலும்பு ஆரோக்கியம்: முந்திரி எலும்புகளை வலுப்படுத்தும் உலர் பழங்களில் முந்திரியும் அடங்கும். இந்த உலர் பழத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இவை எலும்புகளை பலப்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்கள்.

இளமையை காக்க: முந்திரி பருப்பை உட்கொள்வதால் சருமத்தின் நிறம் மேம்படும். புரதச்சத்து நிறைந்த முந்திரி முடி வளர்ச்சியை அதிகரித்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த முந்திரியை தினமும் உட்கொண்டால், அது உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது.

கண் ஆரோக்கியம்: முந்திரி பருப்பை உட்கொள்வதால் கண் ஆரோக்கியமும் மேம்படும். இதில் ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற கரோட்டினாய்டுகள் உள்ளன. அவை கண் பார்வை கூர்மையை மேம்படுத்துவதிலும், கண் பிரச்சனைகள் பலவற்றை தடுப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பக்க விளைவுகள்: அளவிற்கு அதிகமானால், அமிர்தமும் நஞ்சு என்பார்கள். முந்திரியில் ட்ரைகிளிசரைடு என்ற கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே அளவிற்கு அதிகமாக இதனை உட்கொள்வதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதோடு, முந்திரியில் அதிக ஆக்சலேட் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக இருப்பதால், அளவிற்கு அதிகமானால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்
அண்மைய செய்திகள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்

வைகாசி 16, 2025
வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வைகாசி 14, 2025
ஆரோக்கியமான வாழ்விற்கு  அவரை!
அண்மைய செய்திகள்

ஆரோக்கியமான வாழ்விற்கு அவரை!

வைகாசி 10, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025
அண்மைய செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

வைகாசி 10, 2025
ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்
அண்மைய செய்திகள்

ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்

வைகாசி 9, 2025
தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்

வைகாசி 5, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில்.  நகையை மீள கையளித்தவருக்கு குவியும் பாராட்டுக்கள்…

யாழில். நகையை மீள கையளித்தவருக்கு குவியும் பாராட்டுக்கள்…

24 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…

7 நாட்கள் முன்னர்
இந்தியாவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கம் அதிகரிப்பு

இந்தியாவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கம் அதிகரிப்பு

4 நாட்கள் முன்னர்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 மே 2025

5 நாட்கள் முன்னர்
செம்மணியில் நாளைய தினம் அகழ்வுப்பணி ஆரம்பம்

செம்மணியில் நாளைய தினம் அகழ்வுப்பணி ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In