EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதிக்கு வந்த கிராம மக்கள்.

வீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதிக்கு வந்த கிராம மக்கள்.

தை 16, 2025
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியில் வசிக்கும் மக்கள் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கூறி போராட்டம் ஒன்றினை இன்றையதினம் (15.01.2025) மாலை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி 1,2,3 குறுக்கு வீதிகள்
50 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாததனால் அண்மைய மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றதோடு குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட பாலமும் சீராக அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு, நீர் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் வாழுகின்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த வீதி 50 வருடங்களுக்கு மேலாக சீரின்றி காணப்படுவதோடு அவசர நிலமைகளின் போது கூட பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி 1,2,3 குறுக்கு வீதிகளில் வசிக்கும் மக்கள் மழைக்காலங்களில் மட்டுமல்ல ஏனைய காலங்களிலும் குறித்த வீதி குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றது. இதனால் குறித்த வீதியில் பயணம் செய்யும் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு பல வருடமாக இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக குறித்த கிராம மக்கள் கருத்து தெரிவிக்கும்போது 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தும் இதுவரை புனரமைக்கப்படவில்லை. குறித்த பகுதி வீதியில் அதிகமாக மாற்றுதிறனாளிகள், சிறுவர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் அவசர மருந்து தேவைக்கோ, பாடசாலைக்கு கூட பயணிக்க முடியாத நிலை இருக்கின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றது. எனவே எமது வீதிகளை பிரதேச சபையோ, மாவட்ட செயலகமோ, தற்போதுள்ள அரசாங்கமோ கவனத்தில் எடுத்து அதனை புனரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் –  வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 21, 2026
மீள பாடசாலைகள் ஆரம்பம்
இலங்கை

மீள பாடசாலைகள் ஆரம்பம்

தை 21, 2026
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்
இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

தை 21, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
அண்மைய செய்திகள்

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது

தை 21, 2026
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை
அண்மைய செய்திகள்

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

தை 21, 2026
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்
அண்மைய செய்திகள்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

தை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை  முற்றாக நீக்க  வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்

4 நாட்கள் முன்னர்
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் –  ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In