EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மாந்தை மேற்கு- ஈச்சிலவக்கை கிராம உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை: ஜெகதீஸ்வரன் எம்.பி

மாந்தை மேற்கு- ஈச்சிலவக்கை கிராம உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை: ஜெகதீஸ்வரன் எம்.பி

மாசி 7, 2025
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

மாந்தை மேற்கு- ஈச்சிலவக்கை கிராம உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம், அடம்பன், ஈச்சிலவக்கை ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து இன்று (06.02) கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதன்போது உயிலங்குளம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவை பார்வையிட்டோம். இம் மருத்துவ மனையானது பல குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் இவ் வைத்தியசாலையை சுத்தப்படுத்தவுள்ளோம். மற்றும் மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது. மருந்துகளை வைத்து பராமரிப்பதற்கான குளிரூட்டப்பட்ட வசதிகள் கொண்ட களஞ்சியசாலை என்பவற்றையும் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும், மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள ஈச்சலவக்கை கிராமம் மிகுந்த பின் தங்கிய கிராமமாக உள்ளது. அந்தக் கிராமத்தில் பல உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் மூன்று கிராமங்களை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தெரிவு செய்துள்ளோம். அதில் ஈச்சிலவக்கை கிராமமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது குடிநீர், பாதைகள், பாடசாலை, முன்பள்ளி, ஆலயங்கள் போன்ற அனைத்து இடங்களையும் அபிவிருத்தி செய்வதற்குரிய செயற்திட்ட முன்மொழிவுகளை சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வழங்கியுள்ளோம். அதற்கான நிதியை விடுவித்து இவ்வருடத்திற்குள்ளேயே இக் கிராமத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு முடிக்கவுள்ளோம்.

ஈச்சிலவக்கை பாடசாலையில் பணிபுரியும் அதிபர், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். விளையாட்டு துறையில் இப் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டம் வரை சென்று சாதனை புரிந்துள்ளார்கள். ஆசிரியர், அதிபர் ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். இப் பாடசாலையில் சில வேலைகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது. அதனை செய்து முடிப்போம்.

எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரிதமாக இணங்காணப்பட்ட இவ் வேலைகளை செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் –  வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 21, 2026
மீள பாடசாலைகள் ஆரம்பம்
இலங்கை

மீள பாடசாலைகள் ஆரம்பம்

தை 21, 2026
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்
இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

தை 21, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
அண்மைய செய்திகள்

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது

தை 21, 2026
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை
அண்மைய செய்திகள்

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

தை 21, 2026
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்
அண்மைய செய்திகள்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

தை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது

செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது

3 நாட்கள் முன்னர்
உணர்வு பூர்வமாக இடம்பெற்ற 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

உணர்வு பூர்வமாக இடம்பெற்ற 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
பயங்கரவாத தடைச்சட்டத்தை  முற்றாக நீக்க  வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In