EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
பூசணி இலைகளை நம் உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்….

பூசணி இலைகளை நம் உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்….

மாசி 9, 2025
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

பூசணிக்காய் இலையில் இருக்கும் சத்துகளை இதுவரை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் இங்கே அறிந்து கொள்ளுங்கள். மாதவிடாய் முதல் மலச்சிக்கல் வரையிலான பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கிறது.

பூசணிக்காய், இந்தியா முழுவதும் அறியப்பட்டிருக்ககூடிய மிகவும் பிரபலமான காய்கறி, பல மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. ஆனால் அதன் இலைகளும் மனித உடலுக்கு மிகவும் நல்லது என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. குறிப்பாக, பெண்களின் பல பிரச்சனைகளுக்கான சிறந்த இயற்கை நிவாரணியாக பூசணி இலைகள் உள்ளன.

பூசணி இலைகளின் முக்கிய ஊட்டச்சத்துக்கள் | பூசணி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் கல்சியம், மாங்கனீசு, விற்றமின் பி6, பாஸ்பரஸ் மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு | மாதவிடாய்க்கு முன் பெண்கள் அனுபவிக்கும் மனநிலை மாற்றங்கள், தலைவலி, சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் மிகவும் பரவலாக உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு பூசணி இலைகளில் உள்ள மாங்கனீசு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது, பெண்களின் உடலில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களை சமநிலை படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும்.

மலச்சிக்கலுக்கும் எலும்பு வலிக்குமான தீர்வு | பூசணி இலைகளில் நிறைந்த நார்ச்சத்து, மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும். இதேபோல், பூசணி இலைகளில் உள்ள கல்சியம் மற்றும் பாஸ்பரஸ், எலும்புகள் மற்றும் மூட்டுகளை பலப்படுத்த உதவுகிறது. இதனால், பல் வளர்ச்சி மற்றும் எலும்பு வலிகளுக்கும் நல்ல பலன்களை தருகிறது.

இரத்தக் குறைபாட்டுக்கு தீர்வு | பூசணி இலைகளில் உள்ள இரும்புச்சத்து, இரத்தம் குறைவதற்கான தீர்வாக இருக்கிறது. இது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்த குறைபாட்டையும் சரி செய்ய உதவுகிறது. இதன் மூலம், பெண்கள் தங்கள் உடலின் இரத்த அளவை இயற்கையாக மேம்படுத்த முடியும்.

உடலின் கொழுப்பு அளவை குறைக்கும் | பூசணி இலைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைத்து, இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது, செரிமானத்தை சிறப்பாக மேம்படுத்தி, உடலில் உள்ள அதிக கொழுப்பை கரைத்துவிட உதவுகிறது.

பூசணி இலைக் குழம்பு: பூசணி இலைகளை குழம்பில் சேர்த்து சாப்பிடுங்கள். இது, மலச்சிக்கல் மற்றும் எலும்பு வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பூசணி இலைகளை நறுக்கி, அதிலிருந்து சாறு எடுத்து தினசரி குடிக்கலாம். இது, இரத்தக் குறைபாட்டையும் நீக்குகிறது.

பருப்புடன் பூசணி இலைகளை சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். இது உடலின் சீரான சிகிச்சைக்கு உதவுகிறது. பூசணி இலைகள், பெண்களின் உடலுக்கு தேவையான பலவகையான நன்மைகளைக் கொடுக்கின்றன. அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், நீங்கள் பல முக்கியமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்
அண்மைய செய்திகள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்

வைகாசி 16, 2025
வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வைகாசி 14, 2025
ஆரோக்கியமான வாழ்விற்கு  அவரை!
அண்மைய செய்திகள்

ஆரோக்கியமான வாழ்விற்கு அவரை!

வைகாசி 10, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025
அண்மைய செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

வைகாசி 10, 2025
ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்
அண்மைய செய்திகள்

ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்

வைகாசி 9, 2025
தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்

வைகாசி 5, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்

வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்

6 நாட்கள் முன்னர்
யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…

யாழில் சிகிச்சை பலனின்றி முதியவரொருவர் உயிரிழப்பு…

1 நாள் முன்னர்
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் புதிய நிபந்தனைகள் விதிப்பு

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் புதிய நிபந்தனைகள் விதிப்பு

6 நாட்கள் முன்னர்
வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…

வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…

1 நாள் முன்னர்
மன்னார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

நாடாளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்…

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In