EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராடுபவர்களுக்கு  நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு.

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராடுபவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு.

மாசி 18, 2025
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக, நஷ்டம், தொந்தரவு ஏற்படலாம் என்ற வகையில் மன்னார் பொலிஸாரால் முன் வைக்கப்பட்ட தடை உத்தரவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(17) மாலை தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிய மணல் அகழ்வு மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக இரு முறை மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில் இரு முறையும் மக்களின் ஒன்றினைந்த எதிர்பால் அரச திணைக்களங்கள் உள்ளடங்களாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் மீண்டும் குறித்த அரச திணைக்களங்கள் மற்றும் ஒரியன் மினரல் நிறுவனம் ஆய்வுக்காக மன்னார் ஓலைத்தொடுவாய் மற்றும் தோட்டவெளி பகுதிக்கு வருகை தர உள்ள நிலையில் பொதுமக்கள் அணி திரண்டு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் போராட்ட காரர்கள் என அடையாளப்படுத்தி சிலரின் பெயர்களை குறிப்பிட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் பொலிஸார் தடையுத்தரவை பெற்றுள்ளனர்.

குறித்த தடை உத்தரவானது சட்டத்தரணி செல்வராஜ் டினேசன், அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உள்ளடங்களாக 10 பேருக்கு எதிராக பெறப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவின் கீழ் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும். எந்த பொது சொத்துக்களுக்கு தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்த கூடாது. மிக முக்கியமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் ஒரியன் மினரல் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நீதிமன்ற கட்டளை திங்கட்கிழமை(17) ஆம் திகதி தொடக்கம் எதிர் வரும் 14 நாட்களுக்கு வலுவுள்ளதாக காணப்படும் என குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கையின் போது மன்னார் மக்களுக்கு விருப்பம் இல்லாத கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பகிரங்கமாக தெரிவித்த நிலையில் அவர் ஜனாதிபதியாக ஒரு வருட காலப்பகுதிக்குள் கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதற்கான கூர்ப்பு அறிக்கையை தயார் செய்வதற்கான இரண்டாவது முறை அரச திணைக்களங்கள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பூஸ்ஸ சிறையில் குழப்பம் விளைவித்த கைதிகள்
இலங்கை

பூஸ்ஸ சிறையில் குழப்பம் விளைவித்த கைதிகள்

தை 17, 2026
நாட்டில் பதிவான வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

நாட்டில் பதிவான வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 17, 2026
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு
அண்மைய செய்திகள்

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு

தை 17, 2026
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்
அண்மைய செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்

தை 17, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
இலங்கை

நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது

தை 17, 2026
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
இலங்கை

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து

தை 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கொஹுவளையில் நால்வர் கைது

வனாதே சம்பத் கைது

4 நாட்கள் முன்னர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

5 நாட்கள் முன்னர்
மிளகாய் வகைகளின் விலை அதிகரிப்பு

மிளகாய் வகைகளின் விலை அதிகரிப்பு

6 நாட்கள் முன்னர்
கொழும்பு கங்காராம  விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு கங்காராம விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

6 நாட்கள் முன்னர்
யாழில். வாகன விபத்து

யாழில். வாகன விபத்து

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In