நாட்டில் அண்மைய காலமாக சில பொருட்களின் விலைகள் குறைந்தும், அதிகரித்தும் வருவதை அவதானிக்கின்றோம். இந்நிலையில் ஒரு கிலோ பலயா மீனின் கொள்முதல் விலை 250 ரூபாவாக குறைந்துள்ளதாக சிலாபம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி ஒரு கிலோ கெலவல்லா மீனின் விலையும் இன்றிலிருந்து 500 ரூபாவாகக் குறைந்துள்ளதுடன், மீனவர்கள் மீன்களின் விலை குறைப்பினால் தாங்கள் செலவழித்த பணம் கூட தங்களுக்கு கிடைக்காது என்று கவலை வெளியிட்டுள்ளனர்.