எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு ரிடோ மண்டபத்தில் (Rideau Hall) இடம்பெறவுள்ளது
மார்க் கார்னி மற்றும் புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்பு ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை பதவி விலகுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பதவி விலகும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து பொறுப்பேற்கும் புதிய லிபரல் தலைவர், மாற்றம் “தடையற்றதாகவும் விரைவாகவும் இருக்கும்” என்று உறுதியளித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை பிரதமர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்வார், இதன் மூலம் அவரது அமைச்சரவை கலைக்கப்படும். பின்னர் மார்க் கார்னி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் ஆளுநர் ஜெனரலின் அதிகாரப்பூர்வ இல்லமான ரிடோ ஹாலில் பதவியேற்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.