அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (18) நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
இன்று இடம்பெறும் உக்ரேன் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது, ‘நிலம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள்’ தொடர்பாக தானும் விளாடிமிர் புட்டினும் விவாதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சில சொத்துக்களைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக ஏற்கனவே உரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
உக்ரேனில் யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் அதேவேளை, ரஷ்யா உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை, பதிலாக பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி வருகின்றது
இதற்கிடையில் உக்ரேன் மற்றும் ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதல்களைப் பரஸ்பரம் மேற்கொண்டு வருகின்றன.
ரஷ்யாவின் நிலப்பரப்பிற்கு அருகாமையினால் உக்ரேனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சுமி பிரதேசத்தை ரஷ்ய துருப்பினர் மீளக் கைப்பற்றியுள்ளதாகப் பிரதேசத்தைச் சேர்ந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பிரசஸ்சில்ஸ்சில் கூடியுள்ளனர்.
உக்ரேன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் (Andriy Sybiha) காணொளி மூலம் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், உக்ரேனின் தற்போதைய போர் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
இது தவிர, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்க உறவுகள் மற்றும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்தும் அவர்கள் விரிவாக விவாதிக்கவுள்ளனர்