கடந்த நாட்களில் லெபனானும் சிரியாவும் மோதலில் ஈடுபட்டிருந்தன. தற்போது இவ் இரு நாடுகளும் யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடைப்பட்ட எல்லைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்கள் நீடித்த மோதலை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக சிரிய பாதுகாப்பு தெரிவித்துள்ளது.
லெபனான் மற்றும் சிரியாவுக்குமிடையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை இந்த இணக்கப்பாடு மேம்படுத்தும் என்று சிரிய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் லெபனானுக்கும் சிரியாவுக்கும் இடையில் இடம்பெற்ற இம்மோதலில் ஏழு லெபனான் குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும், 4 வயது சிறுமி உட்பட 52 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த போராளிகள் கடந்த சனிக்கிழமை சிரியாவிற்குள் நுழைந்து மூன்று வீரர்களைக் கடத்தி சென்று லெபனானில் அவர்களைக் கொன்றதாக சிரிய இடைக்கால அரசாங்கம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இம்மோதல் வெடித்தது. இக்குற்றச்சாட்டை ஹிஸ்புல்லா மறுத்துள்ளது.