உலகில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் மியன்மார் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் முக்கிய இடம்பெறும். இதன்படி மியன்மாரை தொடர்ந்து ஜப்பானில் 6.0 ரிச்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் கியூஷு பகுதியில் மணிக்கு 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அங்குள்ள மக்களால் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுடன் மக்கள் அச்சத்துடன் செயற்படுவதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தால் பாரியளவான சேதங்கள் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.