இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீண்டும் உறுதியாகி இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய நம்பிக்கை, உடன்பாடுகள் மற்றும் தீர்க்கப்படாதுள்ள பல விடயங்களுக்கான தீர்வுகளைக் காணுதல் போன்ற விடயங்கள், புதிதாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதை அடுத்து, கடந்த காலங்களில் ஜேவிபி கடைபிடித்து வந்த இந்தியாவுக்கு முரணான கொள்கை தொடர்பில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில் இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என, மோடியின் விஜயம் அமைந்திருந்தது.
இதன் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது