பிரபல தென்னிந்திய நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய குட் பேட் அக்லி திரைப்படம் உலக அளவில், இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
இந்தத் திரைப்படம் கடந்த 10 ஆம் திகதி வெளியாகியது.
அஜித் குமார் இரசிகர்களையும் கடந்து இந்த திரைப்படம் சினிமா இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் உலகளவில் இரு நாட்களில் இந்த வசூலை படைத்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகிய குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ப்ரியா பிரகாஷ் வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.