தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு சாவகச்சேரி பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை முதன்மை வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன், வேட்பாளர்கள், தொகுதி அமைப்பாளர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.