EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
காணி விடுவிப்பு கோரி ஊடக சந்திப்பினை மேற்கொண்டவர்களை அச்சுறுத்திய பொலிஸார்…

காணி விடுவிப்பு கோரி ஊடக சந்திப்பினை மேற்கொண்டவர்களை அச்சுறுத்திய பொலிஸார்…

சித்திரை 17, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதியிடம் தமது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்த காணி உரிமையாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் , பலாலி வீதி கட்டுப்பாடுகள் இன்றி முழுமையாக திறக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் ஊடகங்கள் ஊடாக முன் வைக்கும் வகையில் வசாவிளான் சந்திக்கு அண்மையில் ஊடக சந்திப்பொன்றினை ” வலி. வடக்கு காணி விடுவிப்புக்கான அமையம்” எனும் அமைப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த ஊடக சந்திப்பு ஆரம்பமாக இருந்த சமயம் அவ்விடத்திற்கு வருகை தந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவ்விடத்தில் ஊடக சந்திப்பினை நடாத்த முடியாது என ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களை அச்சுறுத்தி , அவர்களை தனித்தனியே ஒளிப்படங்கள் எடுத்ததுதான் , அவர்களின் பெயர் , அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவு செய்தனர்.

அத்துடன் அங்கிருந்த ஊடகவியலாளர்களையும் ஒளிப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

அச்சறுத்தல்களையும் மீறி குறித்த ஊடக சந்திப்பு அவ்விடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இனவாத ரீதியில் செயற்பட்டு வருபவர் எனவும் ,சட்டவிரோதமான முறையில் தையிட்டி கட்டப்பட்டுள்ள விகாரைக்கு எதிரான போராட்டங்களின் போதும் போராட்டக்காரர்களுடன் முரண்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர் என்பதுடன் , விகாரைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கைது நடவடிக்கைகளை முன்னெடுக்க முற்படுபவர் எனவும் மக்களால் குற்றம் சாட்டப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் வசூலிக்க தீர்மானம்
அண்மைய செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் வசூலிக்க தீர்மானம்

மார்கழி 4, 2025
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை வீழ்ச்சி -வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை வீழ்ச்சி -வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

மார்கழி 4, 2025
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!
இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

மார்கழி 4, 2025
மூடப்படும் கணேத்தன்ன – கடுகன்னாவ வீதி
அண்மைய செய்திகள்

மூடப்படும் கணேத்தன்ன – கடுகன்னாவ வீதி

மார்கழி 4, 2025
சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மார்கழி 4, 2025
பகிடிவதை  குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களுக்கு தொடர்ந்தும்  விளக்கமறியல்
இலங்கை

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மார்கழி 4, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் நீரில் மூழ்கிய ரோலர் படகுகளை மீட்கும் பணி ஆரம்பம்

மன்னாரில் நீரில் மூழ்கிய ரோலர் படகுகளை மீட்கும் பணி ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்
ஹசலகாவில் மண்சரிவு – 7 பேரின் உடல்கள் மீட்பு

ஹசலகாவில் மண்சரிவு – 7 பேரின் உடல்கள் மீட்பு

7 நாட்கள் முன்னர்
ஜனாதிபதியால்  அறிவிக்கப்பட்ட  விசேட சேவைகள்!

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட விசேட சேவைகள்!

7 நாட்கள் முன்னர்
கலஹா மண்சரிவு – இன்று 8 பேரின் உடல்கள் மீட்பு!

கலஹா மண்சரிவு – இன்று 8 பேரின் உடல்கள் மீட்பு!

4 நாட்கள் முன்னர்
வெள்ளத்தில் சிக்கிய சிறைக் கைதிகள்

வெள்ளத்தில் சிக்கிய சிறைக் கைதிகள்

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In