ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி உடன் பெண்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்தரமுல்லையை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும் வெள்ளவத்தையை சேர்ந்த 68 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை இன்று கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.