ஆர்.சி.பி அணியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றிக்கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததோடு 33 பேர் காயமடைந்தனர்.
கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தமை தொடர்பாக வருத்தம் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் கோஹ்லி பதிவிட்டுள்ளார்
இச் சம்பவத்தினால் வார்த்தைகளை இழந்து நிற்கிறேன். முற்றிலும் மனமுடைந்து போனேன் என பதிவிட்டு உள்ளதோடு பெங்களூரு அணி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையையும் பகிர்ந்து உள்ளார்.
இதேவேளை கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், அவருடைய இன்ஸ்டாகிராமில் அந்த அறிக்கையை பகிர்ந்ததுடன், உடைந்து போன இதயத்தின் எமோஜி குறியிட்டையும் வெளியிட்டு உள்ளார்,
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. நிர்வாகமும் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.