இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டனர்.