கனடாவின் பெரும்பாலான பகுதிகள் வழக்கத்தை விட வெப்பமான கோடைக்காலத்தை எதிர்கொள்ளும் என கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பின் (Environment and Climate Change Canada) சமீபத்திய வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
பெரும்பாலான மாகாணங்களில் மழைப்பொழிவு நிலைகள் நிச்சயமற்றதாக இருந்தாலும், மேற்கு கனடா வழமைக்கு மாறாக குறைந்த மழையைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது கடுமையான காட்டுத்தீ ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கனடா, கியூபெக், ஒன்டாரியோ மற்றும் வடக்கு மனிடோபா ஆகிய பகுதிகள் வழக்கத்தை விட வெப்பமான கோடையை அனுபவிக்கும் வாய்ப்புள்ளது.
வடமேற்கு கனடாவில் உள்ள பியூபோர்ட் கடல் (Beaufort Sea) போன்ற ஒரு சில குளிர்ச்சியான இடங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த முன்னறிவிப்பு ஒரு வெப்பமான கோடையை நோக்கியே உள்ளது
பெரும்பாலான மாகாணங்களுக்கு நம்பகமான மழை முன்னறிவிப்பை வழங்க முடியவில்லை என்று வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், அல்பேர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் சஸ்காட்செவனின் சில பகுதிகள் வழக்கத்தை விட குறைந்த மழையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.