EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
பிரதமர் கார்னியினால்  முன்மொழியப்பட்ட சட்டத்திற்க்கு எதிர்கட்சியினால் எதிர்ப்பு

பிரதமர் கார்னியினால் முன்மொழியப்பட்ட சட்டத்திற்க்கு எதிர்கட்சியினால் எதிர்ப்பு

ஆனி 12, 2025
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவின் பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட “வலுவான எல்லைகள் சட்டம்” (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்ட புதிய சட்டமூலம், வழக்கறிஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

இந்த 140 பக்கங்களடங்கிய சட்டமூலத்தில் மறைந்துள்ள சில அம்சங்கள், கனடியர்களின் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், எல்லைப் பாதுகாப்புடன் தொடர்பில்லாத பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, காவல்துறையினர் பிடியாணை இல்லாமல் இணையப் பாவனையாளர்களின் தகவல்களை அணுகுவதற்கு அனுமதிக்கும் விதிகள் குறித்து அதிக கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிகள் “சட்டரீதியான அணுகல்” (Lawful Access) தொடர்பானவை.

இதன் மூலம், காவல்துறையினர் இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் இணையச்சேவை நிறுவனங்களிடமிருந்து அடிப்படை சந்தாதாரர் தகவல்களை, நீதிமன்றத்தின் பிடியாணை இல்லாமல் கோர முடியும்.

கனடாவின் காவல்துறையினர் இவ்வாறான “சட்டரீதியான அணுகல்” அதிகாரங்களுக்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரி வருகின்றனர்.

இதற்கு முன் பலமுறை இவ்வாறான சட்டங்களை இயற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை தோல்வியடைந்தன.

2014 ஆம் ஆண்டில், முன்னாள் ஹார்ப்பர் அரசாங்கம் இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்ற முயற்சித்து, தோல்வியடைந்தது.

தற்போதுள்ள கார்னி அரசாங்கமும் இந்த அதிகாரங்களை நியாயப்படுத்த, குழந்தை பாதுகாப்பை ஒரு காரணமாக முன்வைத்துள்ளது.

கனேடிய குழந்தை பாதுகாப்பு மையம் (Canadian Centre for Child Protection) போன்ற அமைப்புகள், சட்டரீதியான அணுகலின் ஒரு வடிவத்தை ஆதரிக்கின்றன.

ஐபி முகவரியை ஒரு சந்தேக நபருடன் இணைக்க பிடியாணை பெறுவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்றும், இதனால் முக்கியமான ஆதாரங்கள் இழக்கப்படலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

கனேடிய காவல் துறை தலைவர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோமஸ் கேரிக் (Thomas Carrique) கூறுகையில், குற்றவாளிகள் பயன்படுத்தும் மேம்பட்ட தகவல் தொடர்பு மற்றும் குறியாக்க தொழில்நுட்பங்கள் தற்போதைய சட்டங்களை விட மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் “கட்டுப்பாடற்ற அணுகலை” கோரவில்லை என்றும், “நியாயமான சந்தேகத்தின்” அடிப்படையில் “மிகக் குறைந்த தகவல்களை” மட்டுமே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

பொதுமக்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறை
கனடா

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறை

ஆடி 8, 2025
சமூக அபிவிருத்திக்காக  20 மில்லியன் டொலர் நிதியை  ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு
கனடா

சமூக அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு

ஆடி 8, 2025
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்து வரும்  பாலின அடிப்படையிலான வன்முறை
கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறை

ஆடி 8, 2025
டிரம்பினால்  அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளடங்காத  கனடா
கனடா

டிரம்பினால் அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளடங்காத கனடா

ஆடி 8, 2025
வடக்கு லீஃப் ராப்பிட்ஸ் நகரை அச்சுறுத்தும் காட்டுத்தீ
கனடா

வடக்கு லீஃப் ராப்பிட்ஸ் நகரை அச்சுறுத்தும் காட்டுத்தீ

ஆடி 7, 2025
கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்
கனடா

கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்

ஆடி 7, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிப்பு!

இலங்கையில் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிப்பு!

2 நாட்கள் முன்னர்
கரடியனாறு பதுளை வீதியில்  வாகனம் விபத்தில்   இளைஞன் ஒருவர் பலி!

பதுள்ளவல விகாரை வீதியில் வாகன விபத்தில் வயோதிபப் பெண்பலி!

3 நாட்கள் முன்னர்
யாழில்  இரவு மது அருந்தியவர் காலையில் சடலமாக மீட்பு!

யாழில் இரவு மது அருந்தியவர் காலையில் சடலமாக மீட்பு!

10 மணத்தியாலங்கள் முன்னர்
வத்தேகமயில் பஸ் விபத்து!

வத்தேகமயில் பஸ் விபத்து!

6 நாட்கள் முன்னர்
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்!

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In