கியூபெக் மாகாணத்தில் வெள்ள அபாயப் பகுதிகளுக்குள் வரும் வீடுகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு சுமார் 30% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியூபெக் மாகாணத்தின் புதிய வெள்ள அபாய வரைபடங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது, இந்த அதிகரிப்பு ஏற்படும் என மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பெனோயிட் சாரெட் (Benoit Charette) நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.
தற்போது சுமார் 25,000 ஆக உள்ள வெள்ள அபாய மண்டலங்களில் உள்ள வீடுகளின் எண்ணிக்கையானது, 35,000 ஆக உயரும் என அவர் தெரிவித்தார்.
மக்களைப் பாதுகாப்பதும், அவர்களது சொத்துக்களைப் பாதுகாப்பதும், அத்துடன் அவர்கள் எதிர்கொள்ளும் அபாயத்தைப் பற்றி குடியிருப்பாளர்கள் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்துவதுமே, இந்த அரசின் நோக்கம் என, கியூபெக் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பெனோயிட் சாரெட் (Benoit Charette) சுட்டிக்காட்டியுள்ளார்.
கியூபெக்கில் மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்தைப் பற்றிய சரியான தகவல்களைப் பெறுவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கியூபெக் தொடர்பான தற்போதுள்ள வரைபடங்கள் பலவும் 30 ஆண்டுகள் பழமையானவை என்பதையும் கியூபெக் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.