ஒன்ராறியோ மாகாணத்தில் காட்டுத்தீ அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், மாகாணத்திற்குச் சொந்தமான மூன்று முக்கிய நீர் குண்டுவீச்சு விமானங்கள் தற்போது தரையிறக்கப்பட்டுள்ளன.
water bomber என்று அழைக்கப்படும் இந்த நீர் குண்டுவீச்சு விமானங்கள், காட்டுத்தீயை அணைப்பதற்கு பயன்படுத்தப்படாமல், தரையிறக்கப்பட்டமைக்கு, விமானிகள் பற்றாக்குறையே காரணம் எனத் தெரியவருகின்றது.
ஒன்ராறியோ பொதுச் சேவை ஊழியர் சங்கம் இதனை வெளிப்படுத்தியுள்ளது.
இது, தீயணைப்புப் பணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த நீர் குண்டுவீச்சு விமானங்களை இயக்கும் விமானிகள், ஒன்ராறியோவை விட்டு, பிற கனேடிய மாகாணங்களுக்கு பணியாற்றச் செல்கின்றனர்.
அந்த மாகாணங்களில் நீர் குண்டுவீச்சு விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு சிறந்த சம்பளம் கிடைக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
நீர்க்குண்டுகளை வீசி காட்டுத்தீயை அணைக்கும் வல்லமை கொண்ட, ஆறு விமானங்களை வாங்கியுள்ளதாக ஒன்ராறியோ மாகாண அரசு பெருமை பேசினாலும், ற்போதுள்ள விமானங்களுக்குத் தேவையான ஊழியர்களைக் கூட அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என, ஒன்ராறியோ பொதுச் சேவை ஊழியர் சங்கம் விமர்சித்துள்ளது.