இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு அண்மையில் உள்நாட்டு வருமான வரி ஆணையாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது, அதன்படி, அத்தகைய சேவைகளை வழங்குவதில் 18% வற் வரி விதிக்கப்பட உள்ளது.
இவ் வரி விதிப்பு அக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.











