கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் யாழில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மானிப்பாய் பகுதியில் சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கார் ஒன்றில் வருகை தந்த அடையாளந் தெரியாத நபர்களால் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










