மொன்ட்ரியலின் இரண்டு முக்கிய மாநகராட்சிப் கட்சிகளான, புரொஜெக்ட் மொன்ட்ரியல் மற்றும் என்செம்பிள் மொன்ட்ரியல் ஆகிய இரண்டும், சமீபத்தில் நடந்த மாநகராட்சித் தேர்தலின் எட்டுத் தனித்தனி தேர்தல்களின் முடிவுகளை எதிர்த்துச் சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
மிகக் குறைந்த வாக்கு வித்தியாசங்கள், பதிவான முறைகேடுகள் மற்றும் பொதுத்துறை வேலைநிறுத்தங்கள் ஆகியவை பொதுமக்களின் தேர்தல் மீதான நம்பிக்கையைச் சிதைத்திருக்கலாம் என்று கூறி இரு கட்சிகளும் நீதித்துறையினால் முன்னெடுக்கப்படும் வாக்கு மறு எண்ணிக்கைக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
சட்டவிரோதமான சம்பவங்கள் குறித்து பல கவலைகள் இருப்பதாகக் கூறிய எதிர்க்கட்சியான புரொஜெக்ட் மொன்ட்ரியல், தனது நான்கு தொகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு கொரிக்கை விடுத்தது.
வென்ற கட்சியான என்செம்பிள் மொன்ட்ரியல் இதே கவலைகளைச் சுட்டிக்காட்டி நான்கு வெவ்வேறு தொகுதிகளின் முடிவுகளை எதிர்த்துள்ளது.
இரு கட்சிகளும் எதிர்வரும் புதன்கிழமை கியூபெக் நீதிமன்றத்தில் தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கவுள்ளன.











