ஒட்டாவா சர்வதேச விமான நிலையத்திற்கான Line 4 எனப்படும் ரயில் பாதையில் முன்னெடுக்கப்படும் ரயில் போக்குவரத்துச் சேவையானது, 15 மணி நேரத்திற்கும் மேலாகத் தடைபட்டது.
ஒரு ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமான நிலைய நிலையத்தில் நகர முடியாமல் நின்றமை காரணமாகவே, இந்த போக்குவரத்துத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6:30 மணிக்குத் தொடங்கிய இந்த தடை, திங்கள்கிழமை காலைப் பராமரிப்பு மையத்திற்கு ரயிலைக் கொண்டு செல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
மாநகரப் போக்குவரத்து நிறுவனமான OC Transpo, Line 4 ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.











