யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வருபவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால் தற்போது, வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் அதிகளவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.
ஆகவே தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாரும் கடற்கரைக்குள் இறங்க வேண்டாம் எனவும் கடலுக்கு மிக அண்மித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அப்பகுதி மீனவர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.











