இலங்கையில் அதிகளவான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி இந்த கொலைக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதில் கைதானோர் 22 முதல் 36 வயதுக்கு இடைப்பட்ட, இரத்மலானை, பொரலஸ்கமுவ, மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்களை கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











