மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சந்தேக நபராக கருதப்படும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் அர்ஜுன ஜோசப் அலோசியஸ் உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் பகிரங்க பிடியாணை உத்தரவுகளை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் (11) பிறப்பித்துள்ளது.
குறித்த பணமோசடி தொடர்பான விசாரணையில் பெயரிடப்பட்டுள்ள சந்தேகநபர்களைக் கைதுசெய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











