வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இதன்படி நிக்கோலஸ் மதுரோ தொடர்பானதொரு கருத்தை பிரித்தானிய பிரதமர் கியெர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி நிக்கோலஸ் மதுரோ ஒரு சட்டவிரோத ஜனாதிபதியாக கருதுவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.
வெனிசுலா மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் சட்டபூர்வமான அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நோக்கம் என்றும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
இதேவேளை, வெனிசுலாவில் உள்ள சுமார் 500 பிரித்தானிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கராகஸில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துடன்அரசு இணைந்து செயற்படுவதாக கூறப்படுகிறது.
வெனிசுலாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.











