நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் அதனை கட்டுப்படுத்துவதற்காக தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்று நாள் வேலைத்திட்டத்தின் முதல் நாளில் டெங்கு நுளம்புகளின் இருப்பு தொடர்பில் ஆராயப்பட்டது.
இதில் 31,196 இடங்களில் மேட்க்கொள்ளப்பட்ட ஆய்வில் 2,097 இடங்களில் டெங்கு நுளம்பு கண்டறியப்பட்டது.
இதன்போது நேற்றையதினம் 14 மாவட்டங்களின் 72 சுகாதார மருத்துவ அலுவலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையில் 8,121 இடங்கள் டெங்கு நுளம்பு பரவும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.











