டுபாயில் லொரியின் பின்புறத்தில் சிறிய பேருந்தொன்று மோதி விபத்தொன்று சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,
வாகன சாரதியின் கவனயின்மையால் விபத்து ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்தின் போது வாகனங்களுக்கு இடையேயான இடைவெளியை பின்பற்றாமை தொடர்பில் தெரிவித்துள்ளனர்.











