யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன் ஒரு அங்கமாக உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுன்னாகம் தெற்கு பகுதியிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.
இந்த டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாட்டின் போது டெங்கு பரவும் அபாயத்துடன் காணப்படும் வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
இந்த டெங்கு ஒழிப்பு செயற்பாட்டில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா பிரகாஷ், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஜெயக்குமார், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உத்தியோகஸ்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உடுவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











