கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாட் ஜெனரூ (Matt Jeneroux) வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற பொதுச்சபையின் உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதன்மூலம், ஒரு வாரத்திற்குள் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியை விட்டு வெளியேறும் இரண்டாவது உறுப்பினர் இவர் ஆவார்.
தாம் லிபரல் கட்சியில் சேரப்போவதாக எழுந்த தீவிரமான ஊகங்களை ஒரு நாள் முன்னதாக அவர் மறுத்திருந்த நிலையில், தற்போது தமது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அல்பர்ட்டா மாகாணத்தின் எட்மன்டன் ரிவர்பெண்ட் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாட் ஜெனரூ (Matt Jeneroux), தனது முடிவு கடினமானது என்றாலும் அதுவே தனக்குச் சரியானது என்று கூறினார்.
மேலும், தனது குடும்பத்தினருக்கு அதிக நேரத்தையும் கவனிப்பையும் வழங்குவதற்காகவே இந்த முடிவை மேற்கொண்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.






