டெஸ்லா நிறுவனரும் உலகின் முதல் பணக்காரருமான எலான் மஸ்க், தனக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதன் மூலம், மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் 7.5 ஆண்டுகள் தக்கவைக்கப்பட உள்ளார். பங்குதாரர்கள் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் மஸ்க் அடைந்தால், அவர் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுக்க முடியும்.
இந்த நிலையில், எலான் மஸ்க் சுமார் 1 ட்ரில்லியன் டொலர் தொகையை, ஊதியமாக வழங்க டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டொலர் பணக்காரராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகள் டெஸ்லா கார்களின் விற்பனை சறுக்களை சந்தித்துள்ளது. ஆனாலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. இந்த சூழலில், எலான் மஸ்க் கூடுதல் சம்பளம் கேட்டிருப்பது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சம்பள உயர்வு குறித்து எலான் மஸ்க் கூறுகையில்,
”சம்பள உயர்வானது பணத்துக்காக அல்ல. டெஸ்லாவின் எதிர்கால ரோபோ இராணுவத்தைக் கட்டுப்படுத்த வேறு யாரையும் என்னால் நம்ப முடியாது”
அதனால்தான், நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பெற அதிக பங்குகள் வேண்டும்’’ என்று தெரிவித்தார். அதாவது, தற்போது 15 சதவிகித டெஸ்லா பங்குகளை எலான் மஸ்க் வைத்திருக்கும் நிலையில், அதனை 30 சதவிகிதமாக உயர்த்திக் கேட்கிறார்.
இதன் மூலம் எலான் மஸ்க் தலைமையில் நிறுவனம் நீண்ட கால இலக்குகளை எட்டினால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதிக்க முடியும். இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில், 75 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்குதாரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.






