தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் இருந்தே சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் 20 மற்றும் 30 வயதுடைய இலங்கையர்களும் 50 வயதான கொரிய மேற்பார்வையாளர் ஒருவருமே ஆவர்.
ஞாயிற்றுக்கிழமை(9) இரவு 8:30 மணியளவில் மீன் இனப்பெருக்க பிரிவுகளுக்கு தண்ணீர் வழங்கப் பயன்படுத்தப்படும் பெரிய நீர்த்தேக்க தொட்டியில் இருந்தே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேற்பார்வையாளரின் குடும்பத்தினர் இரவு அவர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்ததை தொடர்ந்து மேட்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் பணி சீருடையிலும் மற்ற இருவரும் வழக்கமான உடையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றார்களா அல்லது வேறு பணியில் ஈடுபட்டிருந்தார்களா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
விபத்துக்கான சாத்தியம் அல்லது மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றார்களா அல்லது வேறு பணியில் ஈடுபட்டிருந்தார்களா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.






