கியூபெக் மாகாணத்தின் வடக்கே உள்ள தசியுஜாக் (Tasiujaq) பகுதியே, உலகின் மிக உயர்ந்த அலைகளைக் கொண்டுள்ளமை தற்போது, உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் நோவா ஸ்கோடியாவில் உள்ள ‘ஃபண்டி விரிகுடா’ (Bay of Fundy) பகுதியிலேயே, உலகின் மிக உயர்ந்த அலைகள் எழுவதாக கருதப்பட்டு வந்தது.
எனினும், தற்போது செயற்கைக்கோள் மூலமாகக் கிடைத்துள்ள ஆதாரங்கள், தசியுஜாக் (Tasiujaq) பகுதியிலேயே, அதிக உயரமான அலைகள் எழுவதாகத் தெரிவித்துள்ளன.
தசியுஜாக் கடல் அலைகளின் உயரம் 16.35 மீட்டர் ஆகும்.
இது ஃபண்டி விரிகுடாவின் அலைகளை விடவும் அரை மீட்டர் அதிகமென, செயற்கைக்கோள் தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடிய விண்வெளி ஆய்வு மையம் (CSA) வெளியிட்ட புகைப்படங்களில், தசியுஜாக் அருகில் உள்ள ‘லீஃப் பேசின்’ (Leaf Basin) பகுதியில் கடல் நீர் உள்வாங்குவதும், பிறகு மலைபோல் எழும்புவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.











