கிரீன்லாந்துடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தனது புதிய தூதரகத்தை (Consulate) இன்று, அங்கே அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கின்றது.
கனடாவின் முதல் பூர்வகுடி கவர்னர் ஜெனரல் மேரி சைமன் (Mary Simon) மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் இந்தத் தூதரகத்தைத் திறந்து வைக்கின்றனர்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்த அரசியல் நகர்வினை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்கவும், தங்களது ஆதரவைத் தெரிவிக்கவும் 60-க்கும் மேற்பட்ட கனடிய இனுவிட் (Inuit) பழங்குடித் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் கிரீன்லாந்து தலைநகர் நூக்-கிற்கு (Nuuk) வந்து சேர்ந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்க விரும்புவதாகவும், தேவைப்பட்டால் ராணுவத்தைப் பயன்படுத்துவோம் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஒற்றுமைப் பயணம் அமைந்துள்ளது.






