தற்போது ஒலிம்பிக் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கனடா நாட்டில் ரொறன்ரோவை சேர்ந்த 17 வயதான சிறுமியொருவர் நீச்சல் போட்டியில் மூன்று தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
சம்மர் மக்கினோஸ் என்ற இந்த சிறுமி 200 மீற்றர் மெட்லே,200 மீற்றர் பட்டர்பிளை மற்றும் 400 மீற்றர் மெட்லே ஆகிய நீச்சல் போட்டிகளிலே தங்க பதக்கங்களை பெற்றுள்ளார்.
மேலும் ஒரே போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற ஒரே கனடிய பெண் இவராவார்.






