பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானைச் சேர்ந்த 22 தீவீரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவத்தின் பொதுமக்கள் தொடர்புகளுக்கான சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து முன்னெடுத்த தீவிர தேடுதலின் போது பாதுகாப்புப் படையினருடன் தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இச்சமயமே 22 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், தீவிரவாத அச்சுறுத்தலை நாட்டிலிருந்து துடைத்தெறிய பாதுகாப்புப் படையினரும் சட்ட அமுலாக்க நிறுவனங்களும் மேற்கொள்ளும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் முழு வேகத்துடன் முன்னெடுக்கப்படும்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் முழு நாடும் பாகிஸ்தானின் ஆயுதப் படைகளுடன் நிற்கின்றனர். நாட்டிலிருந்து அனைத்து வகையான தீவிரவாதத்தையும் முற்றிலுமாக ஒழிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.






