கியூபெக் மாகாணத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.
குறிப்பாக, 2026-ஆம் ஆண்டின் முதல் ஒரு மாதத்திலேயே 5 பெண்கள் குடும்ப வன்முறையினால் உயிரிழந்துள்ள நிலையில்,
பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவிகள் குறித்த விழிப்புணர்வைச் சமூக ஆர்வலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தற்போது கியூபெக்கில் உள்ள அவசரக் காப்பகங்கள் (Shelters) மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.
சில மாதங்களில் உதவி கோருவோரில் 70 சதவீதத்தினருக்கு இடம் அளிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இருப்பினும், தங்குமிடம் கிடைக்காவிட்டாலும் மற்ற பல வழிகளில் பாதுகாப்பைப் அளிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Rebâtir என்ற திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் இழப்பீடு குறித்து
வழக்கறிஞர்களிடம் 4 மணிநேரம் இலவசமாக ஆலோசனை பெறலாம்.
பிரெஞ்சு அல்லது ஆங்கிலம் தெரியாத குடியேற்றவாசிகள் இந்த வசதிகளைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்கின்றனர் என்று
கூறப்படுகின்றது.
இவர்களுக்காகப் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதிகளையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தற்போது விரிவுபடுத்தி வருகின்றன.






