சென்னையில் நடைபெற்ற 16 ஆவது எடிசன் திரைப்பட விருது விழாவில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய ஐயோசாமி நீ எனக்கு வேணாம் பாடல் சிறந்த உணர்ச்சிபூர்வமான பாடலுக்கான விருதை வென்றுள்ளது.
கவிஞரும் பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் ஷனுக்க விக்ரமசிங்ஹ ,பாடகி விண்டி குணதிலக்க ஆகியோர் விருதை இணைந்து பெற்றுக்கொண்டனர்.
விருது, இயக்குனரும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மற்றும் சென்னைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் ஆகியோரது கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவின் போது பாடகி விண்டி குணதிலக்க தனது அழகிய குரலில் ஐயோசாமி நீ எனக்கு வேணாம் பாடலை பாடி மகிழ்வித்தார்.
விருதை பெற்றுக்கொண்ட கலைஞர்கள் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
கவிஞர் அஸ்மினுக்கு இது இரண்டாவது எடிசன் விருது என்பது மேலதிக தகவல்.











