EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை-18 மணி நேரத்திற்க்குப் பின் மீட்பு.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை-18 மணி நேரத்திற்க்குப் பின் மீட்பு.

புரட்டாதி 19, 2024
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம் பந்திகுயி பகுதியில் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.

தவுசா ராஜஸ்தான் மாநிலம், தவுசாவில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டது.ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம் பந்திகுயி பகுதியில் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்த நிலையில் இருந்த 35 அடி ஆழ, ஆழ்துளை கிணற்றில் 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தவுசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சிதா சர்மா, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினர்.

இதேபோல, மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்டிஆர்எஃப்) மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் (எஸ்டிஆர்எஃப்) சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை தொடங்கினர். சுமார் 18 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்று குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்.

மீட்பு பணி குறித்து என்டிஆர்எஃப் உதவி கமாண்டர் யோகேஷ் குமார் கூறுகையில், “குழந்தை 28 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்தார். குழந்தையை மீட்க ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டது. குழந்தையின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை. மழை காரணமாக மீட்புப் பணிகள் எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் நீடித்தது. என்டிஆர்எஃப்-ஐ சேர்ந்த 30 பேரும், எஸ்டிஆர்எஃப்-ஐ சேர்ந்த 10 பேரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்” என்றார்.

குழந்தை மீட்கப்பட்டது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் சர்மா கூறுகையில், “18 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகவும் கடினமான பணியாக இருந்தது. என்டிஆர்எஃப், மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்களின் உதவியால் எங்களால் இதை செய்ய முடிந்தது. குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட்ட  அவசரகாலநிலை
உலகம்

அவுஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட்ட அவசரகாலநிலை

தை 11, 2026
பாகிஸ்தானில் வெடித்த எரிவாயு கொள்கலன்
உலகம்

பாகிஸ்தானில் வெடித்த எரிவாயு கொள்கலன்

தை 11, 2026
த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பாணை விடுப்பு
உலகம்

த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பாணை விடுப்பு

தை 6, 2026
ஜனாதிபதி மதுரோவை விடுவியுங்கள் – சீனா
உலகம்

ஜனாதிபதி மதுரோவை விடுவியுங்கள் – சீனா

தை 4, 2026
மதுரோ ஒரு சட்டவிரோத ஜனாதிபதி – பிரதமர் கியெர்  ஸ்டார்மர்
உலகம்

மதுரோ ஒரு சட்டவிரோத ஜனாதிபதி – பிரதமர் கியெர் ஸ்டார்மர்

தை 4, 2026
வெனிசுலா ஜனாதிபதி கைது
உலகம்

வெனிசுலா ஜனாதிபதி கைது

தை 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

எழுவைதீவில் தனியார் காணியை சுவீகரித்த கடற்படையினர்

எழுவைதீவில் தனியார் காணியை சுவீகரித்த கடற்படையினர்

11 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

2 நாட்கள் முன்னர்
கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

3 நாட்கள் முன்னர்
கச்சதீவு திருவிழா

கச்சதீவு திருவிழா

6 நாட்கள் முன்னர்
பாம்புக்கடிக்கு இலக்கான  இளைஞன் உயிரிழப்பு

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In