EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
அதிக பணிச்சுமையால் உயிரிழந்த இளம் யுவதி-இந்தியாவில் சம்பவம்.

அதிக பணிச்சுமையால் உயிரிழந்த இளம் யுவதி-இந்தியாவில் சம்பவம்.

புரட்டாதி 20, 2024
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் ஐ.டி கம்பெனியில் அதிக பணிச்சுமையால் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டின் (26) என்ற இளம் பெண்ணே இவ்வாரு உயிரிழந்துள்ளார். கொரோனாவிற்கு பிறகு அதிகமான ஐ.டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுவதை வழக்கமாக்கிவிட்டது.

அதேசமயம் அலுவலகத்தில் 8 மணி நேர வேலை என்றால் வீட்டில் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்யவேண்டிய சூழல் உள்ளதனால், பலரும் இரவு நீண்ட நேரம் வேலை செய்து வருகின்றனர்.கேரளாவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டின் (26) என்ற பெண் கடந்த மார்ச் மாதம் சி.ஏ படித்து முடித்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்தார்.

ஆனால் வேலையில் சேர்ந்த 4 மாதத்தில் அப்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தனது மகள் பணி அழுத்தம் காரணமாகத்தான் இறந்தார் என்று அன்னாவின் தாயார் அனிதா குற்றம் சுமத்தியுள்ளார்.”அன்னாவின் மேலாளர் நாள் முடியும் நேரத்தில்தான் வேலை கொடுப்பார். இதனால் எனது மகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இரவு நேரத்தில், விடுமுறை நாள்களில் கூட வேலை கொடுப்பார்.

அதிகப்படியான வேலை இருப்பதாக அன்னா எங்களிடம் தெரிவித்தார். கூடுதல் வேலையை கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படி கேட்பார். நான் இது போன்ற வேலைகளை எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று சொல்வேன்.

ஆனால் அவரது மேலாளர் தொடர்ந்து வேலை கொடுத்துக்கொண்டே இருந்தார். அன்னாவிற்கு ஓய்வெடுக்கக்கூட நேரம் இல்லை. இரவு, விடுமுறை நாளில் கூட வேலை செய்து கொண்டிருப்பார். ஒரு முறை அவரது கம்பெனி உரிமையாளர் இரவில் வேலையை கொடுத்துவிட்டு காலைக்குள் முடிக்கும்படி கூறினார்.

மற்றொரு முறை அன்னாவின் உதவிமேலாளர் இரவில் வேலையை கொடுத்துவிட்டு அடுத்த நாள் காலைக்குள் முடித்துக்கொடுக்கும்படி கூறினார். அன்னா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், இரவில் வேலை செய்யுங்கள், நாங்களும் இரவில் வேலை செய்கிறோம் என்று சொல்வார்கள்

அன்னா தனது படுக்கை அறைக்கு வரும் போது மிகவும் சோர்வாக வருவார். சில நேரங்களில் உடைகளைக்கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் படுத்துவிடுவார்.தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க கடினமாக உழைத்தார். நாங்கள் வேலையை விடும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறி தொடர்ந்து வேலை செய்தார்.

அவருக்கு அதிகப்படியான அழுத்தம் இருந்தது. இதனால் உடல் நிலை மோசமடைந்து இறந்துவிட்டார்.இனியாவது விழித்துக்கொண்டு பணியாற்றும் கலாசாரத்தை மாற்றி, ஊழியர்களின் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என உயிரிழந்த யுவதியின் தாயார் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 

 

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் மதுரோவை  நாடு கடத்த முயற்சிக்கும் அர்ஜென்டீனா
உலகம்

நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்த முயற்சிக்கும் அர்ஜென்டீனா

மாசி 5, 2026
அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ
உலகம்

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ

மாசி 2, 2026
ஈகுவேடாரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
உலகம்

ஈகுவேடாரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

தை 31, 2026
இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர்
உலகம்

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர்

தை 29, 2026
பதவியை இராஜிநாமா செய்தார் பல்கேரியா ஜனாதிபதி
உலகம்

பதவியை இராஜிநாமா செய்தார் பல்கேரியா ஜனாதிபதி

தை 21, 2026
இங்கிலாந்து உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பு
உலகம்

இங்கிலாந்து உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பு

தை 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In