கனடாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கனடா இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளது.
இப்பதவிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20 டொலர்களாகும்.
தற்போதைய கடினமான வேலை சந்தையில், இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி, கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்ற சில நாட்களில் தேர்தல் அறிவித்தார்.