சிவனின் தீவிர பக்தனான கண்ணப்பரை பற்றி சொல்லும் ஒரு திரைப்படம் தான் “கண்ணப்பா” இந்த திரைப்படம் மிகப்பெரும் சரித்திர படமாக உருவாகி வருகின்றது.
நடிகர் மோகன்பாபுவின் மகனான நடிகர் விஷ்ணு மஞ்சு நடித்து தயாரித்து வெளியிடுகின்றார். இந்த படத்தில் ப்ரீத்தி முகுந்தன், சரத்குமார், ராகுல் ராமகிருஷ்ணா, ப்ரம்மானந்தம் மற்றும் மோகன்பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் கண்ணப்பா படத்தில் மோகன்லால்,காஜல் அகர்வால், பிரபாஸ், அக்ஷய் குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில்
நடித்துள்ளனர்.
குறித்த படத்தின் ரிலீஸ் திகதியை விரைவில் அறிவிப்போம் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.