கனடா மற்றும் அமெரிக்கா இடையே சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கோடிட்டுக் காட்டக்கூடிய ஒரு பணிசார் ஆவணம் பரிமாறப்பட்டுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்திற்கான ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.
நிலைமை குறித்து நேரடியாக அறிந்த மூன்று ஆதாரங்கள், இந்த ஆவணம் ஒட்டாவாவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே அனுப்பப்பட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளன.
விவாதிக்கப்படும் விடயங்களின் ரகசியத்தன்மை காரணமாக பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் இந்த தகவல்கள் ஊடகநிறுவனம் ஒன்றுக்குத் தெரிவிக்கப்பட்டன.
இந்த ஆவணப் பரிமாற்றம் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒட்டுமொத்த இலக்கின் ஒரு படியாக கருதப்பட்டாலும், இறுதி உடன்பாடு எட்டுவதற்கு இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும் என்று தெரியவருகின்றது.
அடுத்த வாரம் அல்பேர்ட்டாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில், ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.