நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லேப்ரடாரில் கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் காட்டுத்தீயை அணைப்பதற்காக, நியூ பிரன்சுவிக் மாகாணத்திலிருந்து நீர் குண்டுவீச்சு விமானங்கள் (water bombers) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஃபிரெடெரிக்டன் விமான நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் இந்த விமானங்கள் புறப்பட்டன.
கடந்த மூன்று நாட்களாக நீடித்து வரும் காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நெருக்கடியான சூழலை சமாளிப்பதற்காக, மூன்று ஏர் டிராக்டர் 802F ரக நீர் குண்டுவீச்சு விமானங்களும் ஒரு bird dog ரக விமானமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றுடன் ஒரு விமான தொழில்நுட்ப அதிகாரியும் நியூஃபவுண்ட்லாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






