ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட வேண்டும் அவ்வாறு கைவிடாவிட்டால் , அவர்களிடமுள்ள ஆயுதங்களை பலவந்தமாக களைய வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஆஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மில்லியுடனான சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “அவர்கள் ஆயுதங்களை கைவிடவில்லை என்றால், நாங்கள் அவர்களுடைய ஆயுதங்களை களைவோம். அது விரைவாக, இடம்பெறும்” என்றார்.